ஐம் பூதங்களின் அம்சம் நம்மிடம் - Poem Views : 208
Tagged in : Poem
0 0
Send mail

ஐம் பூதங்களின் அம்சம் நம்மிடம்



நெருப்பின் அம்சம் கோபம்
நீரின் அம்சம் கண்ணீர்
வாயுவின் அம்சம் மூச்சுக்காற்று
பூமியின் அம்சம் பொறுமை
ஆகாயத்தின் அம்சம் பரந்து விரிந்த மனது

ஆனால் நாமோ
இதனை உபயோகிப்பதோ

கோபத்தை வெறுப்பாகவும்
கண்ணீரை நீலிக் கண்ணீராகவும்
மூச்சுக் காற்றை (பொறாமையினால் விடும்) பெருமூச்சாகவும்
பொறுமையா என்ன விலை என்றும்
பரந்து விரிந்த மனமா எங்கே என்றும்
இருப்பதை பார்த்தால்...
எங்கே நாம் செல்கிறோம்?

இயற்கை நமக்கு கொடுத்த வளத்தை
நாசம் செய்கிறோம்
எப்பொழுது நாம் விழித்து எழுவோம்?
இயற்கையுடன் இயைந்து வாழ?
By Sanju, On - 2010-02-23



    Login to add Comments .