குழப்பம்

by sabitha 2010-03-06 15:27:38

ஓலமிடவில்லை
ஒப்பாரியுமில்லை
கலங்கி நிற்கிறது
கண்கள்...

சுறுசுறுப்புமில்லை
சுணக்கமுமில்லை
வெந்து கொண்டிருக்கிறது
உடல்...

தோல்வியுமில்லை
துயரமுமில்லை
சிரிக்க மறந்தது
உதடுகள்...

உறக்கமுமில்லை
விழிக்கவுமில்லை
திறக்க மறுக்கிறது
கண்கள்...

ஏனோ தெரியவில்லை
காரணமும் புரியவில்லை
குழம்பி கிடக்கிறது
மூளை...

காதலுமில்லை
கடனுமில்லை
படபடக்கிறது
நெஞ்சம்...

கிராம் கணக்கான
இதயம்கூட இன்று
கிலோ எடையில்
பாரமானது ஏனோ...?

Tagged in:

1983
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments