கடைசிப் பக்கம்

by sabitha 2010-03-31 19:26:40


இன்னும் இரண்டொரு
மணித்துளிகள் நீளலாம்
நெருஞ்சி முற்களாய் காயப்படுத்தும் - அதை
யாரிடமாவது சொல்லிவிட வேண்டும்

திறக்க முடியாத இமைகளுக்குள்
இருள் பரவிக்கிடக்கிறது
குரல்வளைக்குள் காற்றைத் திணிக்கும்
ஒவ்வொரு முயற்சியும் தோல்வியடைகிறது
அடுத்தடுத்த இதயத் துடிப்பிற்கிடையே
இடைவெளி குறைகிறது
மார்புக்கூட்டின் இடதுபக்கத்திலிருந்து
மிதமான குளிர் பரவுகிறது
கடைசி சுவாசத்தின் உள்ளீட்டீல்
தன்னிச்சையாய் வெளிவருகிறது
இரு கண்ணீர்த் துளிகள்

இப்படியாக முடிகிறது
இறக்கி வைக்க முடியாது
இறந்து போனவளின் - கடைசி
இரண்டு மணித்துளிகள்

Tagged in:

2368
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments