Report This Scrap as Inappropriate We request you to choose the appropriate categroy and subcategory that suits your
objectionable concern about the scrap, So that our team can review and find out whether it violates our Guidelines or the
scrap is not suitable for all viewers.
இன்னும் என்ன தோழா
எத்தனையோ நாளா
நம்மை இங்கு நாமே தொலைதோமே
நம்ப முடியாதா
நம்மால் முடியாதா
நாளை வெல்லும் நாளை செய்வோமே
யாரும் இல்லை தடைபோட
உன்னைமெல்ல எடைபோட
நம்பிக்கையில் நடைபோட சம்மதமே
என்ன இல்லை உன்னோடு
ஏக்கம் என்ன கண்ணோடு
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே
வந்தால்
அலையாய் வருவோம்
வீழ்ந்தால்
விதையாய் விழ்வோம்
மீண்டும் மீண்டும் எழுவோம்
எழுவோம்
இன்னும் இன்னும் இறுக
உள்ளே உயிரும் உருக
இளமை படையே வருக
எழுக
இன்னும் என்ன தோழா
எத்தனையோ நாளா
நம்மை இங்கு நாமே தொலைதோமே
நம்ப முடியாதா
நம்மால் முடியாதா
நாளை வெல்லும் நாளை செய்வோமே
மனம் நினைத்தால்
அதை தினம் நினைத்தால்
நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம்
தொடுவானம் இனி தொடும் தூரம்
பல கைகள் சேர்க்கலாம்
விதை விதைத்தல்
நெல்லை விதை விதைத்தல்
அதில் கள்ளி பூ முளைக்குமா ?
தலைமுறைகள் நூறு கடந்தாலும்
தந்த வீரங்கள் மறக்கும ?
ஒரே மனம்
ஒரே குணம்
ஒரே தடம் எதிர் காலத்தில்
அதே பலம்
அதே திடம்
அகம் புறம் நம் தேகத்தில்
கழுத்தொடும் ஒரு ஆயுதத்தை
தினம் களங்களில் சுமக்கிறோம்
எழுத்தோடும் ஒரு ஆயுதத்தை
எங்கள் மொழியினில் சுவைக்கிறோம்
பனிமூட்டம் வந்து படிந்தென்ன
சுடும் பகலவன் மறையுமா?
அந்த பகைமூட்டம் வந்து பணியாமல்
எங்கள் இருவிழி உறங்குமா?
இதோ இதோ இணைத்தோ
இனம் இனம் நம் கையேடு
அதோ அதோ தெரிந்ததோ
இடம் இடம் கண்ணோடு
யாரும் இல்லை தடைபோட
உன்னைமெல்ல எடைபோட
நம்பிக்கையில் நடைபோட சம்மதமே
என்ன இல்லை உன்னோடு
ஏக்கம் என்ன கண்ணோடு
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே
வந்தால்
அலையாய் வருவோம்
வீழ்ந்தால்
விதையாய் விழ்வோம்
மீண்டும் மீண்டும் எழுவோம்
எழுவோம்
இன்னும் இன்னும் இறுக
உள்ளே உயிரும் உருக
இளமை படையே வருக
எழுக