|
|
வெற்றி நிச்சயம் - அண்ணாமலை பாடல் Lyrics - தமிழ்/Tamil
|
Views : 379
|
|
Tagged in : தமிழ்-Tamil
|
|
|
Report This Scrap as Inappropriate We request you to choose the appropriate categroy and subcategory that suits your
objectionable concern about the scrap, So that our team can review and find out whether it violates our Guidelines or the
scrap is not suitable for all viewers.
|
படம் (Movie) : அண்ணாமலை
பாடல் (Song) : வெற்றி நிச்சயம்
Music Director : தேவா
பாடியவர் Singer: S .P.பாலசுப்ரமணியம்
கவிஞர் : வைரமுத்து
வெற்றி நிச்சயம் , இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே , நான் கொண்ட லட்சியம்
என்னை மதித்தால் என் உயிர் தந்து காப்பேன்
என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பாப்பேன்
அடேய் நண்பா ! உண்மை சொல்வேன் !
சவால் வேண்டாம் , உன்னை வெல்வேன் !
வெற்றி நிச்சயம் , இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே , நான் கொண்ட லட்சியம்
இமயமலை ஆகாமல் எனது உயிர் போகாது
சூரியன் தூங்கலாம் எனது விழி தூங்காது
வேர்வை மழை சிந்தாமல் வெற்றி மலர் தூவாது
எல்லையை தொடும் வரை எனது கட்டை வேகாது
ஒவ்வொரு விதையிலும் விருக்ஷம் ஒளிந்துள்ளதே
ஒவ்வொரு விடியலும் எனது பேர் சொல்லுதே
பணமும் புகழும் உனது கண்ணை மறைக்கிறதே
அடேய் நண்பா ! உண்மை சொல்வேன் !
சவால் வேண்டாம் , உன்னை வெல்வேன் !
வெற்றி நிச்சயம் , இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே , நான் கொண்ட லட்சியம்
இன்று கண்ட அவமானம் வென்று தரும் வெகுமானம்
வானமே தாழலாம் தாழ்வதில்லை தன்மானம்
மேடு பள்ளம் இல்லாமல் வாழ்வில் என்ன சந்தோஷம்
பாறைகள் நீங்கினால் கோடைகில்லை சங்கீதம்
பொய்மையும் வஞ்சமும் உனது பூர்வீகமே
ரத்தமும் வேர்வையும் எனது ராஜாங்கமே
எனது நடையில் உனது படைகள் பொடிபடுமே
அடேய் நண்பா ! உண்மை சொல்வேன் !
சவால் வேண்டாம் , உன்னை வெல்வேன் !
வெற்றி நிச்சயம் , இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே , நான் கொண்ட லட்சியம்
என்னை மதித்தால் என் உயிர் தண்டு காப்பேன்
என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்
அடேய் நண்பா ! உண்மை சொல்வேன் !
சவால் வேண்டாம் , உன்னை வெல்வேன் !
|
|
By rajesh, On - 2010-01-03 |
|
|
|