கவிதையே தெரியுமா ? - Lyrics Views : 339
Tagged in : Lyrics
0 0
Send mail
கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே

குறும்பில் வளர்ந்த உறவே
என் அறையில் நுழைந்த திமிரே
மனதை பிரித்த கொலுசே
என் மடியில் விழுந்த பரிசே
ஊஞ்சல் மழை மேகம் அருகினில் வந்து
என்னை தாலாட்டுதே
வானம் காணாத வென்னிலவொன்று மோக பாலூட்டுதே
நாணம் பொய் நீட்டுதே

உயிரில் இறங்கி வரவா ? உடலில் கரைந்து விடவா ?
உறக்கம் திறக்கும் திருடா
என் கனவில் பதுங்கி இருடா
புடவையாய் மாறி பொன் உடல் மூடி உன்னுடன் வாழவா ?
இருவரின் ஆடை இமைகளே ஆகா இரவை நாம் ஆளவா ?
வேர்வை குடை தேடவா .
By bharathi, On - 2010-02-08



    Login to add Comments .