'இ' தமிழ் பழமொழிகள்
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.
இஞ்சி இலாபம் மஞ்சளில்.
இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு.
இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.
இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.
இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.
இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.
இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை.
இராச திசையில் கெட்டவணுமில்லை.
இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.
இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.
இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.
இருவர் நட்பு ஒருவர் பொறை.
இல்லாது பிறாவது அள்ளாது குறையாது.
இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.
இளங்கன்று பயமறியாது.
இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.
இறங்கு பொழுதில் மருந்து குடி.
இறுகினால் களி , இளகினால் கூழ்.
இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
இறைத்த கிண்று ஊறும், இறையாத கேணி நாறும்.
இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே.
இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.