'எ' தமிழ் பழமொழிகள்

by Geethalakshmi 2010-02-16 16:44:45

'எ' தமிழ் பழமொழிகள்


எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய்?

எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு. (நெருப்பில்லாது புகையாது)

எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?

எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்த்தென்ன?

எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.

எண் இல்லாதவர் கண் இல்லாதவர்.

எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்.

எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.

எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.

எண்ணை முந்துதோ திரி முந்துதோ?

எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?

எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.

எதார்த்தவாதி வெகுசன விரோதி.

எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.

எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.

எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா.

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?

எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம். எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.

எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.

எருது நோய் காக்கைக்கு தெரியுமா?

எருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.

எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது.

எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் துக்குகிறவர் யார்?

எலி அழுதால் பூனை விடுமா?

எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.

எலி வளை யானாலும் தனி வலை வேண்டும்.

எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்.

எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?

எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.

எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.

எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?

எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.

எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்.

எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.

எள்ளூ என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.

எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.

எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்.

எறும்பு ஊர கல்லுந் தேயும்.

எறும்புந் தன் கையால் எண் சாண்.
1572
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments