மாமல்லபுரம்

by Nirmala 2010-02-16 18:58:04

மாமல்லபுரம்
அழகிய நிலப் பகுதிகள் கொண்ட இந்தியாவில் பாரம்பரிய சின்னங்கள் நிறைந்த சுற்றுலா முக்கியத்துவம் பெற்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

திராவிட கட்டிடக் கலை பாணியை பிரதிபலிக்கும் கோயில்கள், புராணக் கதை நிகழ்வுகள், சிற்பங்களின் கருவூலமாக திகழ்கிறது மாமல்லபுரம். தமிழ்நாட்டை பொருத்தவரை சிற்பக் கலைகளின் திருப்புமுனையாக அமைந்துள்ள மாமல்லபுரம் அக்காலத்து சமூக நிகழ்வுகளை படம்பிடித்துக் காட்டுகிறது.

சென்னையிலிருந்து சுமார் 58 கி.மீ தொலைவில் உள்ள மாமல்லபுரமானது மகேந்திரபல்லவராலும், மாமல்லநரசிம்மராலும் தமிழகத்திற்கு அளிக்கப்பட்ட போக்கிஷம்.

குடைவரைகள், ஒற்றைக்கல் தளிகள் போன்றவையெல்லாம் பண்டையக் காலத்து கட்டுமானக் கோயில்களை நம் கண் முன்னே நிறுத்துகின்றன. கட்டிடங்களாக மட்டுமின்றி ஏராளமான சிற்பங்களையும் தம்மகத்தே கொண்டுள்ளது.

மாமல்லபுரம் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள அழகிய கற்கோயில் காண்போரின் கண்களை வெகுவாக கவர்கிறது. குன்றுகளை குடைத்தெடுத்த கோயில்களை போன்றதல்ல இக்கோயில், குன்றுகளிலிருந்து கற்களை பெயர்த்து கொண்டுவந்து கட்டப்பட்ட கோயிலாக காட்சியளிக்கிறது.

தமிழகத்திற்கு அழியாப் புகழ் அளிக்கும் வகையில் அமைந்துள்ள மாமல்லபுரத்தின் அற்புத சிலைகள் 300 ஆண்டுகளாகியும் பொலிவுடன் காணப்படுவது வியப்புக்குறிய விஷயமாகவே உள்ளது.

மாணவர்கள் மற்றும் சிற்பிகளின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் சிற்ப, சித்திரக்கூடங்களும் இங்கு உள்ளன. பழைய கலங்கரை விளக்கம், கொடிக்கால் மண்டபம், அர்ஜீனன் தவம், குகைகள், அஞ்சுரதம், கிருஷ்ண மண்டபம் என காணத்தக்க இடங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

என்ன மகாபலிபுரத்தின் சிற்பங்களை காண தயாராகிவிட்டீர்களா?
1647
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments