உன் நினைவோடு… நானிங்கு

by sabitha 2010-02-18 15:49:55

நீயங்கு…
நானிங்கு…
நாம் வாழும் வாழ்க்கையின்
இருப்பிடம் வெவ்வேறு

உணர்வுகள் உளறலாய்
வெளிப்படும் இரவுகள்
கழிவது எவ்வாறு

பறக்கும் இறகினுள்
முகம் மறைத் தழுதிடும்
பறவையைப் பார்த்தாயா…

நானும் அதுபோல்
அழுதுடும் காட்சியைப்
பார்த்தால் ஏற்பாயா…

கானல் நீராகா
வாழ்க்கையில் சேர்வோம்
ஒன்றாகும் நேரம்
கனவிலும் வாழ்வோம்

கரம் பற்றி
நான் அணைப்பேன்
காத லினால்
நீ நனைப்பாய்

உன்னில் வாழும்
நாட்களிலேதான்
உவகை கொள்கின்றேன்

உயிரே உன்னைச்
சேர்வதற்காக
உலகையே எதிர்க்கின்றேன்

Tagged in:

1900
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments