வாழ்வில் ஒரு நாள்

by sabitha 2010-02-19 16:55:13

அன்று காலையில் பள்ளிக்குச் செல்லும் வழியில் சிறுவர்கள் சிலர், "டேய்! அதோ பார்! அடி! அடி!" என்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். ஏன் கூச்சல் போடுகிறார்கள் என்று அறிவதற்காக நான் விரைந்தேன்.

அங்கே, ஓணான் ஒன்று வேலியின் மீது இருந்தது. அது தன் தலையைத் தூக்கி, 'ஒரு தீங்கும் செய்யாத என்னை ஏன் துரத்துறீங்க? ஏன் அடிக்கிறீங்க? என்று கேட்பது போல் பார்த்தது.

"டேய்! ஓணான் நம்மை முறைக்குடா!" என்றான் ஒரு சிறுவன்.

"இந்த முறைப்பெல்லாம் எங்ககிட்டக் காட்டாதே! காட்டினால் என்ன ஆகும் தெரியுமா?" என்றன் மற்றொரு சிறுவன்.

"ஐயோ! பாவம்!" என்றேன் நான். அருகில் நின்ற சிறுவர்கள் என்னை முறைத்துப் பார்த்தனர். நான் அஞ்சாது, "ஏன் அதை அடிக்கிறீங்க? அது உங்களுக்கு என்ன தீங்கு செய்தது?" என்று அவர்களைக் கேட்டேன்.

என் கேள்விக்கு பதில் ஏதுவும் கிடைக்கவில்லை.

அவர்கள் சிறு சிறு கற்களால் ஓணானைக் குறிபார்த்து அடித்தனர்.

ஒரு சிறுவன் எறிந்த கல் அதன் தலையில் பட்டு கீழே விழுந்தது.

'என்னைப் போன்ற அப்பாவிகளுக்கு இதுதான் கதியா?' என்பதுப் போலத் தலையை மேலும் கீழும் ஆட்டியது, துடிதுடித்து மடிந்தது.

Tagged in:

1762
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments