குற்றவாழிக் கூண்டில் கடவுள்!!!!!

by sabitha 2010-02-20 16:49:23

திமன்றம் கூடுகின்றது. குற்றவாழிக் கூண்டில் கடவுள் நிறுத்தப்படுகின்றார்!.

நீதிபதி:- உமது பெயர் என்ன?

கடவுள்:- கடவுள்

நீதிபதி:- மனிதர்களைப் படைத்தது நீர்தானே?

கடவுள்:- ஆமாம்!

நீதிபதி:- மனிதர்களில் பணக்காரர்கள் என்றும் ஏழைகள் என்றும் ஏன் ஏற்றத்தாழ்வுகளோடு படைத்தீர்?

கடவுள்:- நான் படைக்கும்போது அனைவரையும் சமமாகத்தான் படைத்தேன். அவர்கள்தான் தமக்குள் ஆசைகளையும் பொறாமைகளையும் வளர்த்துக்கொண்டு ஒருவரைக் கீளே தள்ளி இன்னொருவர். முன்னுக்கு வரும் வழிமுறைகளை ஏற்படுத்திக்கொண்டார்கள்.

நீதிபதி- ஒருவருக்கு ஆசையையும் மற்றவருக்கு ஆசையுடன் சேர்த்து அதை அடையும் திறமையையும் படைத்தது நீர்தானே?

கடவுள்:- இல்லை! ஆசை என்னால் படைக்கப்பட்டது அல்ல? அவர்களே உருவாக்கிக்கொண்டது.

நீதிபதி:- மனிதன் தனக்குத் துன்பம் வரும் போதெல்லாம் கடவுளே‍ என்னை ஏன் இப்படிச் சோதிக்கின்றாய்” என்று புலம்புகின்றானே! அப்படியானால் மனிதனின் துன்பத்திற்கெல்லாம் நீர்தான் காரணமா?

கடவுள்:- கனம் நீதிபதி அவர்களே பொன்னைச் சுத்தப்படுத்த நெருப்பில் எரித்துக் காச்சுவதில்லையா? அதுபோலத்தான் மனிதனைச் சுத்தப்படுத்த சோதனைகள்!.

நீதிபதி:- அப்படியானால் மனிதனை அழுக்காக்கியவன் யார்?

கடவுள்:- ஓடிக்கொண்டிருக்கின்ற நீர் சுத்தமானதாகவும் தேங்கி நிற்கின்ற நீர் அழுக்காகவும் இருப்பதைப்போல அறிவும் ஆசையும் உள்ள மனிதன் சுத்தமானவனாகவும் ஆசை மட்டும் உள்ள மனிதன் அழுக்கானவனாகவும் இருக்கின்றான். இது மனிதர்களே உருவாக்கிக்கொள்வது!.

நீதிபதி:- பொன்னைச் சுத்தப்படுத்தி புதிய நகைகளை உருவாக்குகின்றார்கள். மனிதன் சுத்தப்படுத்தப்பட்டால்

கடவுள்:- துறவியாகுகின்றான். எனது உண்மையான பிள்ளைகளாகின்றான!

நீதிபதி:- அப்படியானால் மனிதர்கள் உமது அடிமைகளா? அல்லது பிள்ளைகளா?

கடவுள்:- இரண்டும் இல்லை! கடவுள் அரசன்! மனிதர்கள் குடிமக்கள்!.

நீதிபதி:- அப்படியானால் நீர் அரசாள்வதற்காக மனிதர்களை குடிமக்களாகப் படைத்தீரா?

கடவுள்:…….(மௌனம்)

நீதிபதி:- மனிதர்கள் பிறப்பதற்கு காரணம் நீரே ஆகும்போது மனிதர்கள் செய்யும் பாவத்திற்கும் நீர்தானே காரணமாக முடியும்?

கடவுள்:- ……(மௌனம்)

நீதிபதி:- சில மனிதர்களை அறிவாளிகளாகவும் சில மனிதர்களை அறிவு குறைந்தவர்களாகவும் படைத்தது உமது குற்றம்தானே?

கடவுள்:- ….(மௌனம்)

நீதிபதி:- ஏன் மௌனமாக இருக்கின்றீர்? எனது கேள்விகள் உமக்குப் புரிகின்றதா?

கடவுள்:- கொஞ்சம் புரிகின்றது! கொஞ்சம் புரியவில்லை!? கனம் நீதிபதி அவர்களே நீங்கள் கேட்ட கேள்விகள் உங்களுக்குப் புரிகின்றதா?
(கடவுள் மயங்கி விழுகின்றார்)
பார்வையாளர்களாக இருந்த மனிதர்கள் தங்களுக்குள் சொல்லிக் கொண்டார்கள்
‘வழக்கு சுவையாக இருந்தது!”
பொது நீதி:- விடைகள் இல்லாதவரை
வினாக்கள் சுவாரசியமாகவே இருக்கும்!

Tagged in:

2120
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments