எதைப் பத்தின்னு நெனைச்சி பேசிக்கிட்டிருந்தே?

by Sanju 2010-02-23 18:18:30

எதைப் பத்தின்னு நெனைச்சி பேசிக்கிட்டிருந்தே?

"ஹலோ, மச்சான் செம குட்டி ஒண்ணு மாட்டியிருக்குடா?"

"எப்போடா?"

"நேத்து நைட்டு தான் பிக்கப் பண்ணேன். என்னோட ரூமுலே தானிருக்கு!"

"ரூமுலே வெச்சுக்கிட்டிருக்கியா? அடப்பாவி ஒரு நைட்டு முழுசா முடிஞ்சிடிச்சே!"

"ஆமாம் மச்சான், நேத்து செம ஜாலியா இருந்தது.. கிருஷ்ணன் கூட இன்னைக்கு காலைலேர்ந்து லீவ் போட்டுட்டு என் ரூமுலே தானிருக்கான். நான் ஆபிசுக்கு வந்துட்டேன். திரும்ப சாயங்காலம் போயி..."

"டேய்.. டேய்.. ப்ளீஸ் என்னையும் விளையாட்டுலே சேத்துக்குங்கடா!"

"உனக்கு தான் இந்த மேட்டரே புடிக்காதே மச்சான்.. என்னா கலரு, என்னா கொரலு, கண்ணு ரெண்டும் மான் மாதிரி இருக்குடா!"

"அய்யோ.. சொக்கா.. சொக்கா.. உனக்கெல்லாம் எப்படிடா மாட்டுது?"

"த்ரீ தவுசண்ட் கொடுத்தா யாருக்கு வேணும்னாலும் மாட்டுண்டா"

"எத்தனை நாளைக்குடா வெச்சுக்கிட்டிருப்பே?"

"எத்தனை நாளைக்கா? பர்மணெண்டா வெச்சுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேண்டா!"

"பர்மணெண்டாவா? ஊர்லே இருந்து எப்பவாவது அப்பா, அம்மா திடீர்னு வந்துட்டாங்கன்னா பிரச்சினை ஆயிடாது?"

"என்னா பிரச்சினை ஆவும்? ஊர்லே இருக்குறப்பவே ஒண்ணு வெச்சிருந்தேண்டா. அம்மா அப்பாவுக்கும் நல்லா தெரியும்!"

"நல்ல குடும்பம் போ! நான் இப்பவே உன் ரூமுக்கு போவட்டாடா.. ஆசையா இருக்குடா!"

"வேணாம்டா. கிருஷ்ணனை டிஸ்டர்ப் பண்ணாதே. அவனே ஆஃபிஸ் டென்ஷனை எல்லாம் மறந்து கொஞ்ச நேரமாவது ஜாலியா இருக்கட்டும்!"

"ப்ளீஸ்டா.. உன் ரூமுல்லே வேணாம்னா நான் வேணும்னா சாயங்காலம் எங்கேயாவது வெளியே கூட்டிக்கிட்டு போறேண்டா!"

"உன் இஷ்டம்! ஆனா பார்த்து கூட்டிக்கிட்டு போ. ரொம்ப புதுசு. பயந்துட போவுது!"

"அதெல்லாம் நாங்க பார்த்துக்கறோம்!"

"அப்போ சரி. மட்டன், கிட்டன் வாங்கி கொடுத்துடாதே. எலும்பு கடிக்கக் கூட அதுக்கு தெரியாது. பிஸ்கட் மட்டும் வாங்கிக் கொடு!"

"என்னாது பிஸ்கட்டா?"

"ஆமாண்டா. அய்யர் வீட்டுலே வளர்ந்தது.. பாலும், பிஸ்கட்டும் மட்டும் தான் சாப்பிடுது! பொறந்து ஒண்ணரை மாசம் கூட இன்னும் ஆவலே!"

"மச்சி.. நீ எதைப் பத்திப் பேசுறே?"

"நாயைப் பத்தி பேசுறேண்டா. ரொம்ப நாளா சொல்லிக்கிட்டிருந்தேன் இல்லே. ஒரு பொமரேனியன் வாங்கணும்னு. ஆமா. நீ எதைப் பத்தின்னு நெனைச்சி பேசிக்கிட்டிருந்தே?"

"ம்ம்ம்... நானும் நாயைப் பத்தின்னு நெனைச்சி தாண்டா பேசிக்கிட்டிருந்தேன்" டொக்...

Tagged in:

1630
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments