முயலும் சிங்கமும்...

by Sanju 2010-02-23 18:21:13

முயலும் சிங்கமும்...


ஒரு மாலை நேரத்தில் முயல் மும்முரமாக ஒன்றை எழுதிக் கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியில் வந்த நரி..

நரி : என்ன செய்துக் கொண்டு இருக்கிறாய் ?

முயல் : தன் கண்டுபிடிப்பின் செய்முறை விளக்கத்தை எழுதிக்கிறேன்.

நரி : என்ன உன் கண்டுபிடிப்பு ?

முயல் : முயல் எப்படி நரியை சாப்பிடும் என்பதை பற்றியது.

நரி : நீ என்ன முட்டாளா ! யாராவது இதை நம்ப முடியுமா ?

முயல் : என்னுடன் வா ! நான் உனக்கு காட்டுகிறேன்.

நரியும், முயலும் ஒரு மரத்தின் பின்னால் சென்றது. சிறிது நேரம் கழித்து முயல் நரியின் எழும்பைக் கொண்டு வெளியே வந்தது. அதன் பின் தன் எழுதும் வேலையை செய்துக்கொண்டு இருந்த போது, அங்கு ஓனாய் முயலிடம் விசாரித்தது.

ஓனாய் : என்ன செய்கிறாய் ?

முயல் : முயல் எப்படி ஓனாய்யை சாப்பிடும் என்பதை பற்றி எழுதுகிறேன்

ஒனாய் : உனக்கு என்ன பைத்தியமா ? யாரும் நம்ப மாட்டார்கள்.

முயல் : என்னுடன் வா ! உனக்கு காட்டுகிறேன்.

ஓனாயும், முயலும் அதே மரத்தின் பின்னால் சென்றது. சற்று நேரம் கழித்து முயல் ஓனாயின் எழும்பைக் கொண்டு வெளியே வந்தது. இறுதியாக ஒரு கரடி முயலிடம் மற்றதை போல் அதே கேள்வியை கேட்டது.

முயல் அந்த கரடியை மரத்தின் பின் அழைத்து சென்றது. அங்கே, மரத்தின் பின் இருக்கும் சிங்கமிடம் கரடிக்கு அறிமுகம் செய்து வைக்கிறது.

செய்தி : நாம் நம்பும் படி வேலை செய்கிறோம் என்பதை விட நம் மேல் அதிகாரி பிடித்திருந்தால் தான் நாம் எந்த வேலையிலும் நீடிக்க முடியும்.

Tagged in:

1750
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments