பெண் பார்க்கும் படலங்கள்- அன்றும் இன்றும்

by Sanju 2010-02-23 18:27:56

பெண் பார்க்கும் படலங்கள்- அன்றும் இன்றும்




அன்று



ராமசாமி தனது நண்பருக்கு பெண் பார்க்க அவருடன் சென்றார். பெண் வீட்டார் அவர்களை வரவேற்று பெண்ணை நமஸ்காரம் செய்ய வைத்தனர்.

ராமசாமி (பெண்ணின் தகப்பனாரிடம்): பாடத்தெரியுமா?

பெண்ணின் தகப்பனார்(கூச்சத்துடன்): தெரியாதுங்களே

ராமசாமி: நான் உங்களை கேட்கவில்லை உங்க பெண்ணுக்குப் பாடத் தெரியுமா?

பெண்ணின் தகப்பனார்: மன்னிச்சுங்க அவளுக்கு கர்நாடக சங்கீதம் தெரியாது ஆனால் சினிமாப் பாட்டுக்கள் அவளுக்கு தெரியும்

ராமசாமி: சரி ஏதோ ஒன்னு பாடட்டும்

பெண்: சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா என்னை விட்டுப் பிரிந்து போன கணவர் வீடு திரும்பலை.........சிட்டுக்குருவி

பெண்ணின் தகப்பனார்: தலையில் அடித்துக் கொண்டு " இவளுக்கு வேர பாட்டு கிடைக்கலையா?"

பெண்ணின் தகப்பனார்: பையனுக்கு பாடத் தெரியும்னு சொன்னாங்களே

ராமசாமி: அவனுக்கும் சினிமா பாட்டுத் தான் தெரியும்

பெண்ணின் தகப்பனார்: சரி ஏதோ ஒன்னு பாடட்டும்

பையன்: புருசன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே தங்கச்சி கண்ணே சில புத்திமதிகள் சொல்லுறேன கேளு முன்னே.......புருசன் வீட்டில்

ராமசாமி: விடிஞ்சது போ பொண்ணு என்னடானா "என்னை விட்டுப் பிரிந்து போன கணவர் வீடு திரும்பலை" னு பாடறா பையன் என்னடானா "புருசன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே தங்கச்சி கண்ணே" னு பாடறான் இந்த கல்யாணம் நடந்த மாதிரி தான்

பெண்ணின் தகப்பனார்: அதெல்லாம் ஒண்ணும் இல்லை எங்க பொண்ணுக்கு காது கொஞ்சம் மந்தம் பையனுக்கும் அதே மாதிரி தான் அங்கே பாருங்க இரண்டு பேரும் பார்த்து சிரிச்சுக்கறாங்க

இன்று



ராமசாமி தனது நண்பருக்கு பெண் பார்க்க அவருடன் சென்றார். பெண் வீட்டார் அவர்களை வரவேற்றனர் பெண்ணும் அவர்களுக்கு நடுவில் வந்து அமர்ந்து கொண்டாள் மாப்பிள்ளை கூச்சத்தில் நெளிகிறார்

ராமசாமி (பெண்ணின் தகப்பனாரிடம்): பாடத்தெரியுமா?

பெண்ணின் தகப்பனார்: ஓ பாத்ரூமில் நல்லா பாடுவாளே

ராமசாமி: சரி ஏதோ ஒன்னு பாடட்டும்

பெண் : கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா இல்லை ஓடிப் போய் கல்யாணம்தான் கட்டிக்கலாமா

பெண்ணின் தகப்பனார்: பையனுக்கு பாடத் தெரியும்னு சொன்னாங்களே

ராமசாமி: அவனுக்கும் சினிமா பாட்டுத் தான் தெரியும்

பெண்ணின் தகப்பனார்: சரி ஏதோ ஒன்னு பாடட்டும்

பையன்: தாலியே தேவை இல்லை நீ தான் என் பெஞ்சாதி..............

ராமசாமி: ரெண்டு பேரும் ரொம்ப அட்வான்சா போறாங்க

பையன்: நாங்க ஒரே ஆபீஸ்ல தான் வேலை பார்க்கிறோம் ஏற்கனவே நாங்க பழகி கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம். அப்பா அம்மா வோட திருப்திக்கு தான் இந்த பெண் பார்க்கும் படலம்

அன்று



கணபதி தன் பையனிடம்: இன்னிக்கு சாயங்காலம் பெண் பார்க்கப் போறோம் நீ ஆபீஸிலிருந்து சீக்கிரம் வந்து சரிகை வேட்டி சட்டை போட்டுக்கிட்டு நெத்தில பட்டையா வீபூதி பூசிக்கிட்டு எங்களோட வரணும்

இன்று



கணபதி தன் பையனிடம்: இன்னிக்கு சாயங்காலம் பெண் பார்க்கப் போறோம் நீ ஆபீஸிலிருந்து சீக்கிரம் வா

பையன்: ஓ டாடி இதை நேத்திக்கே சொல்லியிருந்தா நான் பியுட்டி பார்லருக்கு போய் வந்திருப்பேன்
1610
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments