சர்தார் ஜோக்கு
by Geethalakshmi[ Edit ] 2010-02-28 20:57:08
சர்தார் ஜோக்கு
ஒரு முறை சர்தார், நண்பர் வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருந்தார். அப்போது ஜாலியாக எல்லோரும் ஜோக் அடித்துக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்தனர். நண்பர் சர்தாரிடம் ஒரு கடி ஜோக் சொன்னார். அவர் சர்தாரிடம், 'நீங்க வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவீங்க?' என்று கேட்டார். அதற்க்கு சர்தார் சொன்னார்,
'வெறும் வயிற்றில் எட்டு இட்லி சாப்பிடுவேன்' என்றார்.உடனே நண்பர் சொன்னார், 'அது எப்படி முடியும், ஒரு இட்லி சாப்பிட்ட உடனேயே தான் வயிறு வெறும் வயிறாக இருக்காதே' என்றார்..
சர்தார் அசடு வழிந்துக் கொண்டு சிரித்துக் கொண்டார்.
தான் வீட்டிற்க்கு சென்றவுடன் தன் மனைவியிடம் இந்த ஜோக்கை சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். வீட்டிற்க்கு வந்த உடன் நேரே மனைவியிடம் சென்று 'நீ வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவாய்?' என்று கேட்டார். அதற்க்கு அவர் மனைவி சொன்னார், ஆறு இட்லி வரைக்கும் சாப்பிடுவேன் என்றார். உடனே சர்தார் கடுப்பாகி சொன்னார்,
'போடி.. எட்டு இட்லின்னு சொல்லியிருந்தா, ஒரு நல்ல ஜோக்கு சொல்லியிருப்பேன்' என்றார்.