நான் 4 வது மாடி வரைக்கும் தான் பாத்தேன்

by Geethalakshmi 2010-02-28 20:59:21

(ஒருவர் மஞ்சப்பை வைத்துக் கொண்டு LIC க்கு முன்னால் நிற்கிறார். ஒரு சென்னை லோக்கல் ரவுடி அவரிடம் )

ரவுடி: இங்க என்ன பண்ணிட்டு இருக்கிற

ஒருவர்: எவ்வளவு பெரிய உயரமான கட்டிடம் பாத்துட்டு இருக்கேன்.

ரவுடி: அப்படியெல்லாம் சும்மா பாக்க கூடாது. நீ எத்தனை மாடி வரை பாத்தியோ அதுக்கு எனக்கு பணம் தரனும். ஒரு மாடிக்கு பத்து ரூபாய் குடு.

ஒருவர் : நான் 4 வது மாடி வரைக்கும் தான் பாத்தேன் இந்தா பிடி (40 ரூபாய் கொடுக்கிறார்)

ஒரு பொது ஜனம்: என்னங்க அந்த ரவுடி ஏமாத்தி பணம் வாங்கிட்டான் உங்களிடம்

ஒருவர்: அவன் எங்க ஏமாந்தான் நான்தான் ஏமாத்திட்டேன். நான் பாத்தது ஏழாவது மாடி அவனிடம் 4 வது மாடின்னு சொல்லி ஏமாத்தி 40 ருவாதானே குடுத்தேன்

Tagged in:

1904
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments