மெய் எழுத்துக்கள்
by Geethalakshmi[ Edit ] 2010-02-28 22:16:42
மெய் எழுத்துக்கள்
மெய்யெழுத்துக்களில் வன்மையான ஓசையுடைய எழுத்துக்கள் வல்லினம் என்றும், மென்மையான ஓசையுடைய எழுத்துக்கள் மெல்லினம் என்றும், இவை இரண்டிற்கும் இடைப்பட்ட ஓசையுடைய எழுத்துக்கள் இடையினம் என்றும் வழங்கப்படும்.
* வல்லினம் : க் ச் ட் த் ப் ற்
* மெல்லினம்: ங் ஞ் ண் ந் ம் ன்
* இடையினம்: ய் ர் ல் வ் ழ் ள்
மெய்யெழுத்துக்கள் ஒவ்வொன்றும் அரை மாத்திரை நேரத்தில் ஒலிக்கப்படும்