தமிழ் அரிச்சுவடி
by Geethalakshmi[ Edit ] 2010-02-28 22:21:10
தமிழ் அரிச்சுவடி
தமிழ் அரிச்சுவடி என்பது தமிழ் மொழியில் உள்ள எழுத்துக்களின் வரிசை ஆகும். அரி என்னும் முன்னடை சிறு என்னும் பொருள் கொண்டது. இதனை தமிழ் அகரவரிசை, தமிழ் நெடுங்கணக்கு போன்ற சொற்களாலும் குறிப்பிடப்படுகிறது. தமிழில் 12 உயிரெழுத்துக்களும், 18 மெய்யெழுத்துக்களும், உயிர்மெய் எழுத்துக்களும், ஆய்த எழுத்தும் உள்ளன. தற்காலத்தில் வழங்கும் கிரந்த எழுத்துக்கள் தமிழ் நெடுங்கணக்கைச் சேர்ந்ததல்ல.
மெய்யெழுத்துக்கள் ஒவ்வொன்றுடனும் உயிரெழுத்து சேரும்போது உருவாகும் எழுத்துக்கள் உயிர்மெய் எழுத்துகள் ஆகும். உயிர்மெய்யெழுத்துகள் மொத்தம் 12x18 = 216 ஆகும். இவற்றுடன் 12 உயிர் எழுத்துக்களும், 18 மெய் எழுத்துக்களும் ஓர் ஆய்த எழுத்தும் சேர்ந்து மொத்தம் 247 தமிழ் எழுத்துக்கள். தமிழ் நெடுங்கணக்கில் சேரா கிரந்த எழுத்துக்கள் (ஜ, ஷ, ஸ, ஹ வரிசைகள்) 52ம் க்ஷ, ஸ்ரீ முதலான எழுத்துக்களும் இன்று பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இதனைப் பலரும் எதிர்த்தும் வருகின்றனர்.