தமிழ் அகரமுதலி

by Geethalakshmi 2010-02-28 22:23:42

தமிழ் அகரமுதலி


அகரமுதலி அல்லது அகராதி என்ற சொல், அகரவரிசைப்படி அட்டவணைப் படுத்தப்பட்ட ஒரு மொழியின் சொற்களையும், அவற்றுக்கான பொருளையும், சில சமயங்களில் அச் சொற்கள் தொடர்பான வேறுபல விவரங்களையும் கொண்டுள்ள நூலைக் குறிக்கும். இவ்வாறு தமிழ்ச் சொற்களுக்கான பொருள் மற்றும் விவரங்களைத் தரும் நூல் தமிழ் அகராதி ஆகும். அகராதி என்ற சொல் அகரம், ஆதி என்ற இரண்டு சொற்களின் சேர்க்கையாலானது (அகரம் + ஆதி = அகராதி). அகராதி அகரமுதலி எனவும் வழங்கப்படும்.

இதன் பெயர் குறிப்பிடுகின்றபடி, இந் நூலிலே சொற்கள் அகர வரிசையில் அமைக்கப்பட்டிருக்கும், ஒரே சொல்லில் தொடங்கும் சொற்கள், அவற்றில் இரண்டாவது எழுத்தைக் கொண்டு வரிசைப்படுத்தப்படும். இவ்வாறே சொல்லின் இறுதி எழுத்துவரை அகரவரிசை பின்பற்றப்படும்.

16 ஆம் நூறாண்டில் இரேவண சித்தர், முதன் முதல் அகரவரிசைப்படி சொற்களைத் தொகுத்தது ஆக்கிய அகராதி நிகண்டுதான். எனினும் இது செய்யுள் அமைப்பிலே உள்ளது. பின்னர் மேற்கத்திய முறைப்படி அமைத்த முதல் தமிழ் அகராதி, சதுரகராதி என்ற பெயரில், தமிழர்களால் வீரமாமுனிவர் என அறியப்படுகின்ற, இத்தாலி நாட்டைச் சேர்ந்தவரான கான்ஸ்டன்ஷியுஸ் பெஸ்கி என்னும் கிறிஸ்தவ மத போதகரால் 1732 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
1475
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments