டேனிய மொழி
by Geethalakshmi[ Edit ] 2010-02-28 22:39:47
டேனிய மொழி
டேனிய மொழி இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் உள்ள ஜெர்மானிய மொழிகளின் துணைக் குழுவான, வட ஜெர்மானிய மொழிகளுள் (ஸ்கண்டினேவிய மொழிகள் என்றும் குறிப்பிடப்படுவது உண்டு) ஒன்று ஆகும். இது சுமார் 6 மில்லியன் மக்களால் பேசப்படுகின்றது. இம் மொழியைப் பேசுவோரில் பெரும்பாலோர் டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர்கள். இம் மொழியினர் 50,000 வரை ஜெர்மனியில் சில பகுதிகளிலும் வாழ்கிறார்கள். தற்போது வரையறுக்கப்பட்ட தன்னாட்சிப் பகுதிகளாக உள்ள கிறீன்லாந்து, ஃபாரோ தீவுகள் போன்ற டென்மார்க்கின் ஆட்சிப்பகுதிகளில் அதிகாரநிலைத் தகுதி பெற்றிருப்பதுடன், பாடசாலைகளில் கட்டாய பாடமாகவும் உள்ளது. அமெரிக்காக் கண்டங்களிலும், ஆர்ஜெண்டீனா, ஐக்கிய அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இம் மொழி பேசுவோர் வாழ்கின்றனர்.