பெயர்ச்சொல்

by Geethalakshmi 2010-02-28 22:45:46

பெயர்ச்சொல்


பெயர்ச்சொல் என்பது ஒன்றன் பெயரை உணர்த்தும் சொல் ஆகும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் பெயர்ச்சொற்கள் தோன்றும். ஆதலால் பெயர்ச்சொல்

* பொருட் பெயர்
* இடப் பெயர்
* காலப் பெயர்
* சினைப் பெயர்
* பண்புப் பெயர்
* தொழிற் பெயர்

என்று ஆறு வகைப்படும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்பவற்றைப் பொருளாதி ஆறு என்றும், பொருள் முதலாறு என்றும் கூறுவர்.
1493
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments