பண்புப் பெயர்
by Geethalakshmi[ Edit ] 2010-02-28 22:47:50
பண்புப் பெயர்
தமிழ் இலக்கணத்தில் பண்புப் பெயர் என்பது, ஒரு பொருளின் பண்பைக் குறித்து நிற்கும் பெயர்ச்சொல்லைக் குறிக்கும். எடுத்துக் காட்டாக நீலம் என்பது நிறமாகிய பண்பைக் குறிப்பதால், அது ஒரு பண்புப் பெயர் ஆகும். இவ்வாறே, நீளம், மென்மை, புளிப்பு போன்ற சொற்களும் பண்புப் பெயர்களாகும். சில சமயங்களில், பண்புப் பெயரை, நிறம், வடிவம், அளவு, சுவை என்பன போன்ற அடிப்படைகளில் வகைப்படுத்துவதும் உண்டு.
தமிழில், இப்படி, அப்படி, எப்படி போன்ற சொற்கள் பண்புப் பெயர்களுக்கான மாற்றுச் சொற்களாகப் பயன்படுகின்றன.