எழுத்து வகைகள்
by Geethalakshmi[ Edit ] 2010-02-28 22:53:22
எழுத்து வகைகள்
தமிழில் எழுத்துக்கள் உயிரெழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள் என இரு பிரிவுகளாகப் பிரித்து அறியப்படுகின்றன. இவற்றுள் அ முதல் ஔ வரையான 12 உயிரெழுத்துக்கள் அவற்றுக்குரிய கால அளவுகளுக்கு அமைய குறில், நெடில் என இரண்டாக வகுக்கப்படுள்ளன. க் முதல் ன் வரையான 18 மெய்யெழுத்துக்களில் குறில், நெடில் என்ற வகைப்பாடு கிடையாது. மெய்யெழுத்துக்கள் உயிரெழுத்துக்களுடன் சேர்ந்து உருவாகும் 216 உயிர்மெய் எழுத்துக்கள், அவற்றில் அடங்கியுள்ள உயிரெழுத்துக்களின் வகையைப் பொறுத்துக் குறிலாகவோ நெடிலாகவோ அமைகின்றன. கீழேயுள்ள அட்டவணையில் இவை பற்றிய விபரங்கள் தரப்பட்டுள்ளன.
எழுத்துவகை எழுத்துக்கள்
உயிரெழுத்துக்கள் -
1 குறில்கள் அ, இ, உ, எ, ஒ
2 நெடில்கள் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ
மெய்யெழுத்துக்கள் க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்
உயிர்மெய் எழுத்துக்கள் -
1 குறில்கள் உயிர்க்குறில்கள் சேர்ந்து உருவான உயிர்மெய்கள்
2 நெடில்கள் உயிர்நெடில்கள் சேர்ந்து உருவான உயிர்மெய்கள்