வெண்பாவுக்கான யாப்பிலக்கணம்
யாப்பிலக்கண நெறிமுறைகள் மிகவும் கட்டுக்கோப்பானவை என்றும் அதனால் அவற்றை ஒரு இடம் சாரா இலக்கண முறையில் எழுத முடியும் என்றும் நிறுவப்பட்டுள்ளது.[3] அந்நெறிமுறைகள் பின்வருவன:
* சீர்களுக்கான நெறிகள்
1. வெண்பா ஈரசைச் சீர்களான மாச்சீரையும், விளச்சீரையும் பெற்று வரும்.
2. மூவசைச் சீர்களில் காய்ச்சீர் மட்டுமே வெண்பாவில் வரும்; கனிச்சீர் வராது.
* நிலைமொழியீற்றசையைப் பொருத்து வருமொழி முதலசை அமைய வேண்டுமென வலியுறுத்தும் தளை நெறிகள்
வெண்பாவுக்கான தளைகள் இயற்சீர் வெண்டளை மற்றும் வெண்சீர் வெண்டளை ஆகும்.
1. இயற்சீர் வெண்டளை - நிலைமொழி ஈற்றில் மாச்சீர் வர வருமொழி முதலில் நிரையசையே வர வேண்டும்; நிலைமொழி ஈற்றில் விளச்சீர் வர வருமொழி முதலில் நேரசையே வர வேண்டும்.
2. வெண்சீர் வெண்டளை - நிலைமொழி ஈற்றில் காய்ச்சீர் வர வருமொழி முதலில் நேரசையே வர வேண்டும்.
வெண்பா செப்பலோசை பெற்று வரும்.
வெண்பாவுக்கான மேலெ தரப்பட்டுள்ள யாப்பிலக்கண நெறிகளுக்கு இணையான இடம் சாரா இலக்கணம் பின்வருமாறு:[4]
<வெண்பா> → <அடி>{1,11}[5]<ஈற்றடி>
<அடி> → <சீர்> <சீர்> <சீர்> <சீர்>
<ஈற்றடி> → <சீர்> <சீர்> <ஈற்றுச்சீர்>
<சீர்> → <ஈரசை> | <மூவசை>
<ஈற்றுச்சீர்> → <நாள்> | <மலர்> | <காசு> | <பிறப்பு>
<ஈரசை> → <தேமா> | <புளிமா> | <கருவிளம்> | <கூவிளம்>
<மூவசை> → <தேமாங்காய்> | <புளிமாங்காய்> | <கூவிளங்காய்> | <கருவிளங்காய்>
<தேமா> → <நேர்> <நேர்>
<புளிமா> → <நிரை> <நேர்>
<கருவிளம்> → <நிரை> <நிரை>
<கூவிளம்> → <நேர்> <நிரை>
<தேமாங்காய்> → <தேமா> <நேர்>
<புளிமாங்காய்> → <புளிமா> <நேர்>
<கருவிளங்காய்> → <கருவிளம்> <நேர்>
<கூவிளங்காய்> → <கூவிளம்> <நேர்>
<நாள்> → <நேர்>
<மலர்> → <நிரை>
<காசு> → <நேர்> <நேர்>
<பிறப்பு> → <நிரை> <நேர்>
<நேர்> → <குறில்> | <நெடில்> | <நேர்> <ஒற்று>
<நிரை> → <குறில்> <குறில்> | <குறில்> <நெடில்> | <நிரை> <ஒற்று>
<குறில்> → {குறுகிய ஒலியுடைய உயிர் எழுத்து அல்லது உயிர்மெய் எழுத்து}
<நெடில்> → {நெடிய ஒலியுடைய உயிர் எழுத்து அல்லது உயிர்மெய் எழுத்து}
<ஒற்று> → {மெய்யெழுத்து}