ஆசிரியப்பா துணைவகைகள்
by Geethalakshmi[ Edit ] 2010-02-28 23:18:15
ஆசிரியப்பா துணைவகைகள்
ஆசிரியப்பாக்கள், அவற்றில் இடம்பெறும் அடிகளின் தன்மைகளை ஒட்டிக் கீழ்க்காட்டியவாறு நான்கு வகைப்படுகின்றன.
1. நேரிசை ஆசிரியப்பா
2. நிலைமண்டில ஆசிரியப்பா
3. அறிமண்டில ஆசிரியப்பா
4. இணைக்குறள் ஆசிரியப்பா
பொதுவான ஆசிரியப்பாவுக்குரிய இயல்புகளுடன் மேற்காட்டிய வகைகள் சில சிறப்பு அம்சங்களைக் கொண்டவையாக இருக்கின்றன. அவ்வாறான சிறப்பு அம்சங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
* நேரிசை ஆசிரியப்பா - கடைசிக்கு முந்திய அடி மூன்று சீர்களைக் கொண்டிருத்தல்.
* நிலைமண்டில ஆசிரியப்பா - எல்லா அடிகளும் நான்கு சீர்களைக் கொண்டிருத்தல்.
* அறிமண்டில ஆசிரியப்பா - எல்லா அடிகளும் பொருள் முற்றிய நாற்சீர் அடிகளாய் இருத்தல்.
* இணைக்குறள் ஆசிரியப்பா - இதன் முதல் மற்றும் இறுதியடிகள் தவிர்ந்த இடையிலுள்ள அடிகள் இரண்டு, மூன்று அல்லது நான்கு சீர்களைக் கொண்ட அடிகள் கலந்து அமையலாம்.