மாத்திரை (யாப்பிலக்கணம்)
by Geethalakshmi[ Edit ] 2010-02-28 23:25:23
மாத்திரை (யாப்பிலக்கணம்)
மாத்திரை என்பது ஒலி உச்சரிக்கப் படும் காலத்தைக் குறிக்கும். ஒரு மாத்திரை நேரம் என்பது கண் இமைக்கும் நேரம் அல்லது கை நொடிக்கும் நேரத்தைக் குறிக்கும்.
ஒரு எழுத்தை உச்சரிக்க ஆகும் கால அளவே மாத்திரை ஆகும்.
இயல்பெழு மாந்தர் இமைநொடி மாத்திரை
- நன்னூல் - 100
(எ.கா) க, ச, ல, ட, போன்ற குறில் எழுத்துக்கள் ஒரு மாத்திரை மட்டும் ஒலிக்கும். கா, சா, லா, டா போன்ற நெடில் எழுத்துக்கள் இரண்டு மாத்திரை நேரம் ஒலிக்கும்.