ஓசை (யாப்பிலக்கணம்)
by Geethalakshmi[ Edit ] 2010-02-28 23:25:50
ஓசை (யாப்பிலக்கணம்)
ஓசை அல்லது தூக்கு என்பது செய்யுளின் ஒரு கூறு எனத் தொல்காப்பியம் கூறுகிறது. செய்யுள்கள் அல்லது பாக்கள், அவற்றின் சீர்களுக்கு இடையேயுள்ள தளைகளின் தன்மையையொட்டி, வெவ்வேறு விதமான ஓசைகளை உடையனவாக இருக்கின்றன. முக்கியமாக இவ்வோசை வேறுபாட்டின் அடிப்படையிலேயே பாவகைகள் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுகின்றன.
ஓசைகள் நான்கு வகைப்படுகின்றன. அவை, செப்பலோசை, அகவலோசை, துள்ளலோசை, தூங்கலோசை என்பனவாகும்.