ஓசை வகை துணைப்பிரிவுகள்
by Geethalakshmi[ Edit ] 2010-02-28 23:27:14
ஓசை வகை துணைப்பிரிவுகள்
ஓசைகள் நான்கு வகைப்படுகின்றன. அவை, செப்பலோசை, அகவலோசை, துள்ளலோசை, தூங்கலோசை என்பனவாகும்.
துணைப்பிரிவுகள்
இவை ஒவ்வொன்றும் மூன்று துணைப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை,
செப்பலோசை
1. ஏந்திசைச் செப்பலோசை, 2. தூங்கிசைச் செப்பலோசை, 3. ஒழுகிசைச் செப்பலோசை
அகவலோசை
1. ஏந்திசை அகவலோசை, 2. தூங்கிசை அகவலோசை, 3. ஒழுகிசை அகவலோசை
துள்ளலோசை
1. ஏந்திசைத் துள்ளலோசை, 2. அகவல் துள்ளலோசை 3. பிரிந்திசைத் துள்ளலோசை
தூங்கலோசை
1. ஏந்திசைத் தூங்கலோசை, 2. அகவல் தூங்கலோசை, 3. பிரிந்திசைத் தூங்கலோசை
என்பனவாகும்.
செப்பலோசை பாவகைகளில் வெண்பாவுக்கு உரிய ஓசையாகும். இது வெண்டளை எனும் தளை வகையினால் உண்டாவது. அகவலோசை ஆசிரியப்பாவுக்கும், துள்ளலோசை கலிப்பாவுக்கும் உரியன. இவற்றுள் அகவலோசை ஆசிரியத் தளையாலும், துள்ளலோசை கலித்தளை, வெண்டளை கலந்த கலித்தளை, இடையிடையே வேறு தளைகள் என்பன கலந்து வருவதால் உண்டாகின்றது. வஞ்சிப்பாவுக்கு உரியதான தூங்கலோசை, வஞ்சித்தளை என்னும் தளை வகையால் உண்டாவது.