மீயொலி
by Geethalakshmi[ Edit ] 2010-02-28 23:29:33
மீயொலி
மீயொலி (Ultrasound) என்பது அதிர்வெண் 20,000க்கு மேற்பட்ட ஒலி அலைகளைக் குறிக்கும். மீயொலிகளை மனிதர்க்களால் கேட்க முடியாது. மாந்தர்கள் நொடிக்கு 20 முதல் 20,000 ஒலி அலைகள் கொண்ட ஒலியலைகளத்தான் கேட்க இயலும்.
மீயொலி கேட்கும் திறன்
நாய்கள், ஓங்கில் (டால்பின்), வௌவால் போன்ற சில விலங்குகள் மீயொலியைக் கேட்கும் திறன் கொண்டவை. மேலும் குழந்தைகளும் பெரியர்வகளைக் காட்டிலும் உயர் அதிவெண்கள் கொண்ட ஒலிகளைக் கேட்க வல்லவர்கள்.
மீயொலிகளின் பயன்கள்
மீயொலிகள் நீர்மப்பொருள் வழி சென்று ஒரு பொருளின் மீது ஒட்டியிருக்கும் நுண்ணிய அழுக்குகளை உலுப்பி விடுவிக்க வல்லது. இதனை வேதியியலிலும், குறைக்கடத்தி மின் கருவிகள் செய்வதிலும், வேறு பல துறைகளிலும் பயன்படுத்துகிறார்கள். குறைக்கடத்தி மின் கருவிகளில், கருவியில் அலுமினியம் போன்ற மின் கம்பிகளை சிலிக்கான் சில்லோடு இணைக்க (ஒட்டுவிக்க) மீயொலிகளைப் பயன்படுத்துகின்றனர். மீயொலி அதிர்ச்சியால் அணுக்கள் அதிரும் பொழுது அணுக்கவையால் ஒட்டுதல் ஏற்படுகின்றது.