நேரிசை வெண்பா

by Geethalakshmi 2010-02-28 23:37:56

நேரிசை வெண்பா


நேரிசை வெண்பா என்பது தமிழிலுள்ள மரபுச் செய்யுள் வகைகளுள் ஒன்றான வெண்பாவின் துணைப் பா வகையாகும். நேரிசை வெண்பாவுக்கான இலக்கணப்படி இது பின்வரும் அமைப்பைக் கொண்டிருக்கும்.

* பொதுவான வெண்பாவுக்கு உரிய இலக்கணங்களைக் கொண்டிருத்தல்.
* நான்கு அடிகளை உடையதாக இருத்தல்.
* இரண்டாவது அடியில் தனிச்சொல் வருதல்.
* நான்கு அடிகளும் ஒரே வகையான எதுகை உடையனவாகவோ அல்லது முதல் இரண்டு அடிகளும் ஒருவகை எதுகை உடையனவாக இருக்க, அடுத்த இரண்டும் வேறுவகை எதுகை உடையனவாகவோ இருத்தல்.
1398
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments