கோட்பாட்டு மொழியியற் பகுதிகள்

by Geethalakshmi 2010-02-28 23:45:09

கோட்பாட்டு மொழியியற் பகுதிகள்


கோட்பாட்டு மொழியியல் பொதுவாக, ஓரளவுக்குத் தனித்தனியாக ஆராயத்தக்க வகையில் பல்வேறு பிரிவுகளாக வகுக்கப்படுகிறது. கீழ்வரும் பிரிவுகள் இன்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன:

* ஒலிப்பியல் (phonetics), ஒரு மொழியில் பயன்படுத்தப்படும் வெவ்வேறு ஒலிகள் பற்றிய துறை;
* ஒலியியல் (phonology), ஒரு மொழியின் அடிப்படை ஒலிகளின் வடிவுரு பற்றி ஆராயும் துறை;
* உருபனியல், சொற்களின் உள் அமைப்புப் பற்றி ஆராயும் துறை;
* சொற்றொடரியல் (syntax), எவ்வாறு சொற்கள் சேர்ந்து இலக்கணத்துக்குட்பட்ட வசனங்களை உருவாக்குகின்றன என்பதை ஆராயும் துறை;
* சொற்பொருளியல் (semantics), சொற்களின் நேரடியான (literal) பொருளை ஆராய்தலுக்கும்,(சொல் குறிக்கும் பொருள் (lexical semantics)), அவை சேர்ந்து உருவாக்கும் வசனங்களின் நேரடியான பொருள்களையும் ஆராயும் துறை;
* மொழிநடை (stylistics), மொழியின் பாணிகளை ஆராயும் துறை;
* சூழ்பொருளியல் (pragmatics), தொடர்புச் செயற்பாடுகளில் எவ்வாறு utterances பயன்படுத்தப்படுகின்றன (literally, figuratively, அல்லது வேறுவிதமாக) என்பது பற்றிய ஆய்வு;

இந்த ஒவ்வொரு பகுதியினதும் தனிப்பட்ட முக்கியத்துவம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை, எனினும், கிட்டத்தட்ட எல்லா மொழியியலாளருமே இந்தப் பிரிவுகள் குறிப்பிடத்தக்க அளவு பொதுப் பகுதிகளைக் கொண்டிருக்கின்றன என்பதை ஒத்துக்கொள்வர். இருந்தாலும் ஒவ்வொரு துணைப்பிரிவும், குறிப்பிடத்தக்க அறிவுபூர்வ ஆய்வுகளைச் செய்யக்கூடிய அளவுக்குத் தனியான அடிப்படையான எண்ணக்கருக்களைக் கொண்டுள்ளன.
1301
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments