விளக்கமுறையும் (Description) விதிப்புமுறையும் (prescription)
by Geethalakshmi[ Edit ] 2010-02-28 23:50:43
விளக்கமுறையும் (Description) விதிப்புமுறையும் (prescription)
"மொழியியல்" என்ற பெயரில் தற்போது நடைபெறும் பெரும்பாலான வேலைகள், சுத்தமாக விபரிப்பு சார்ந்தவையாகும். மொழியியலாளர்கள், கருத்துக்களெதையும் கூறாமல் அல்லது மொழியின் எதிர்காலப் போக்குத் திசைகளைக் குறிப்பிட்டுக் காட்டாமல், மொழியின் இயல்பை விளக்கவே முனைகிறார்கள். எனினும் பல தொழில்சார் மற்றும் அமெச்சூர் மொழியியலாளர்கள், எல்லோரும் பின்பற்றவேண்டிய நியமங்களை வைத்து, மொழிக்கான விதிகளையும் குறித்துக் காட்டுகிறார்கள்.
விதிப்புமுறை சார்பாளர்கள் (Prescriptivists), "பிழையான பயன்பாடு" என்று கருதி முத்திரை குத்தும் ஒரு விடயத்தில், விளக்கமுறையாளர்கள் (descriptivists) அப் பயன்பாட்டின் மூலம் எதுவென்று ஆராய முயல்வர்; அல்லது அதை "வினோதப் போக்கு" (idiosyncratic), என விளக்குவர், அல்லது, மிக நவீனமானது அல்லது அங்கீகரிக்க முடியாத வட்டார மொழிகளிலிருந்து பெறப்பட்டது போன்ற காரணங்களுக்காக விதிப்புமுறை சார்பாளர்களால் விரும்பப்படாத சில ஒழுங்குமுறைகளை வெளிப்படுத்துவார்கள்.