பேச்சு எதிர் எழுத்து
by Geethalakshmi[ Edit ] 2010-02-28 23:51:06
பேச்சு எதிர் எழுத்து
பெரும்பாலான சமகால மொழியியலாளர்கள் பேச்சு மொழியே மிகவும் அடிப்படையானது அதனால், எழுத்து மொழியிலும், பேச்சு மொழி பற்றி ஆராய்வதே முக்கியமானது என்ற கருதுகோளுடன் வேலை செய்கிறார்கள். இதற்கான காரணங்கள் பின்வருவனவற்றை உள்ளடக்கும்:
* பேச்சு மனித இனம் முழுவதற்கும் பொதுவானதாகத் தெரிகின்ற அதேவேளை, பல பண்பாடுகளில், எழுத்துத் தொடர்பு முறை காணப்படவில்லை;
* மக்கள், எழுதுவதிலும், பேசுவதற்கும் கிரகித்துக்கொள்வதற்கும் பேச்சு மொழி எளிதாகப் பழகி விடுகிறார்கள்;
* பல அறிதிற அறிவியலாளர்களின் கூற்றுப்படி, மூளையில் உள்ளார்ந்த "மொழிப் பிரிவு" ஒன்று உள்ளதாகவும், அதற்கான அறிவு எழுத்தைவிடப் பேச்சைக் கற்பதன் மூலமாகவே கிடைக்கிறது என்றும் தெரிகிறது.
எழுத்து மொழியைப் பயில்வது பெறுமதியானது என்பதில் எல்லா மொழியியலாளர்களும் ஒத்த கருத்தையேகொண்டுள்ளார்கள். corpus linguistics மற்றும் கணிப்புமுறை மொழியியல் (computational linguistics), முறைகளைப் பயன்படுத்தும் மொழியியல் ஆராய்ச்சிகளில், பெருமளவு மொழியியல் தரவுகளைக் கையாள்வதற்கு, எழுத்து மொழி மிகவும் வசதியானதாகும். பெருமளவு பேச்சு மொழித் தரவுகளை உருவாக்குவதும், கண்டுபிடிப்பதும் கடினமாகும்.
மேலும், எழுத்து முறைமை பற்றிய ஆய்வும் மொழியியலின் பாற்பட்டதேயாகும்.