தெலுங்கு மொழி வரலாறு
by Geethalakshmi[ Edit ] 2010-02-28 23:54:08
தெலுங்கு மொழி வரலாறு
தெலுங்கு மொழியில் வரலாற்றை பின்வரும் கட்டங்களாக பிரிக்கலாம்
கி.மு 200 - கி.பி 500
பழங்கால பிராகிருத/சமசுகிருத பிராமி கல்வெட்டுகளில், தெலுங்கு இடம் மற்றும் பெயர்கள் காணப்படுகின்றனர். இதிலிருந்து ஆந்திர தேசத்தை ஆண்ட சாதவாகனர்கள் பிராகிருதத்தை தாய் மொழியாகக் கொண்டவர்கள் எனத்தெரிகிறது. தெலுங்கு சொற்கள் மகாராஷ்டிரி பிரகிருத்த்தில் எழுதப்பட்ட பாடல்களில் காணப்படுகின்றன.
கி.பி 500 - கி.பி 1100
தெலுங்கு மொழி, கல்வெட்டுகள் முதன்முதலாக ஆந்திரத்தின் கடப்பா மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது கி.பி 575ஆம் காலத்திய கல்வெட்டாகும். இக்கல்வெட்டு ரேனாட்டி சோழர்களால் எழுதப்பட்டதாக கருதப்பருகிறது. இவர்களே முதன் முதலாக சமஸ்கிருதத்தை விடுத்து உள்ளூர் மொழியான தெலுங்கில் கல்வெட்டுக்களை வெளியிட்டனர். இவர்களுக்கு பிறகு பிற சாளுக்யர்களும் கல்வெட்டுகளை தெலுங்கை பயன்படுத்த ஆரம்பித்தனர். இக்காலத்தில் தான் தெலுங்கு இலக்கியம் தோன்ற ஆரம்பித்தது. தெலுங்கில் எழுத்தப்பட்ட முதல் இலக்கியமாக கருதப்படும் நன்னய்யரின் மகாபாரதம் இக்காலக்கட்டத்திலே எழுதப்பட்டது. மேலும், இதே காலத்தில் தெலுங்கு மொழியில் பல்வேறு ஒலியியல் வேறுபாடுகள் ஏற்பட்டன.
கி.பி 1100 - கி.பி 1400
இக்காலக்கட்டத்தில் இலக்கிய தெலுங்கு பேச்சு வழக்கில் இருந்து மிகவும் வேறுபடத்துவங்கியது. ஒரு நிலையில் கேதனர் என்ற புலவர் மக்கள் பயன்படுத்தும் சொற்களை இலக்கியங்களில் கையாளாகாது, எனக்கருத்தை வெளியிட்டார். மேலும் பல வடமொழி நூல்கள் தெலுங்கில் மொழிப்பெயர்க்கப்பட்டது. மேலும் தெலங்காணா பகுதிகளில் சுல்தான்களின் இதே காலக்கட்டதில்தான் துவங்கியது
கி.பி 1400 - கி.பி 1900
இக்காலத்தில், தெலுங்கு மற்ற இந்திய மொழிகளைப் போலவே பலவிதமான வேறுபாடுகளை சந்தித்தது. இசுலாமிய தாக்கத்தின் காரணமாக தெலங்காணா வழக்கு மற்றப் பொதுத் தெலுங்கு வழக்கிலிருந்து மிகவும் வேறுபட்டுவிட்டது. தெற்கில் கோதாவரி நதி பகுதிகளில், விஜயநகர அரசு 1336 முதல் 1600 வரை மிகவும் செல்வாக்குடன் திக்ழ்ந்தது. விஜய நகர அரசர் கிருஷ்ண தேவராயரின் காலம் தெலுங்கு இலக்கியத்தின் பொற்காலம் என கருதப்படுகிறது. தெலுங்கு இலக்கியம் இவரது காலத்தில் மிகவும் எழுச்சியுடன் திகழ்ந்தது. விஜய நகர அரசின் வீழ்ச்சிக்கு பிறகு தெலுங்கு பேசும் பகுதிகளில் இசுலாமிய ஆட்சி நிறுவப்பெற்றது. இதன் காரணத்தால் பல பாரசீக மற்றும் உருது சொற்களும் தெலுங்கு மொழியில் கலந்தன.
கி.பி 1900 முதல் இன்று வரை
20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆங்கிலேயரின் ஆட்சியின் காரணமாக, ஆங்கிலத்தில் தாக்கம் தெலுங்கு மொழயில் ஏற்ப்பட்டது. குறிப்பாக சென்னை மாகாணத்தில் இத்தாக்கம் உணரப்பட்டது. இக்காலகட்டத்தில் பல்வேறு நவீன கால இலக்கியங்கள் தோன்ற துவங்கின.
ஆனால் பேச்சு வழக்குக்கும் எழுத்து வழக்குக்கும் மிகப்பெரிய வேறுபாடுகள் இருந்தன. இதைக் கருத்தில் கொண்டு தெலுங்கை, மக்கள் பேச்சு மொழிக்கு ஒட்டிய நடையில் தற்போது எழுதி வருகிறார்கள்.