தெலுங்கில் மெய்யெழுத்துக்கள்
by Geethalakshmi[ Edit ] 2010-02-28 23:56:04
தெலுங்கில் மெய்யெழுத்துக்கள்
தெலுங்கு சமசுகிருத நெடுங்கணக்கில் உள்ள அனைத்து எழுத்துக்களுடன், திராவிட மொழிகளுக்கு உரிய ளகரம் மற்றும் றகரமும் கொண்டுள்ளது. தெலுங்கு மொழியில் பழங்காலத்தில் 'ழ' கரம் இருந்தது. ஆனால் தற்சமயம் அவ்வொலி மறைந்து விட்டது.
క ఖ గ ఘ ఙ
చ ఛ జ ఝ ఞ
ట ఠ డ ఢ ణ
త థ ద ధ న
ప ఫ బ భ మ
య ర ఱ ల ళ
వ స శ ష హ
தெலுங்கு மொழி மிகவும் இனிமையான மொழியாக பலரால் கருதப்படுகிறது. தெலுங்கில் அனைத்து சொற்களும் இத்தாலிய மொழியைப் போல் உயிரெழுத்துடன் முடிவைடைகிறது. எனவே தான் இம்மொழியின் இனிமையைக்கருதி ஆங்கிலேயர்கள் இதை கிழக்கின் இத்தாலிய மொழி(Italian of the East) என அழைத்தனர்.
தெலுங்கில் ஒரு பெயர் அறியப்படாத கவி இவ்வாறு கூறியுள்ளார்.
வடமொழியின் சக்கரை பாகு, தமிழின் அமிழ்தத்தண்மை கன்னடத்தின் கஸ்தூரி நறுமணம் இவை அனைத்தையும் ஒரு சேர உடையது தான் தித்திக்கும் தெலுங்கு