தெலுங்கு இலக்கியம்

by Geethalakshmi 2010-02-28 23:56:37

தெலுங்கு இலக்கியம்


தெலுங்கு இலக்கியத்தை கீழ்க்கண்ட காலங்களாக பிரிப்பர்

* நன்னய்யருக்கு முற்காலம் - கி.பி 1020 வரை
* புராண காலம் - கி.பி 1020 முதல் கி.பி 1400 வரை
* ஸ்ரீநாதரின் காலம் - கி.பி 1400 முதல் கி.பி 1510 வரை
* பிரபந்த காலம் - கி.பி 1510 முதல் கி.பி 1600 வரை
* தெற்கு காலம் - கி.பி 1600 முதல் கி.பி 1820 வரை
* நவீன காலம் - கி.பி 1820 முதல் இன்று வரை

தெலுங்கு மொழியில் முதல் இலக்கியமாக நன்னய்யரின்(1022-1063) மகாபாரதம் கருதப்படுகிறது. இவரது காலத்துக்கு பிறகு திக்கன்னா, எர்ரன்னா போன்ற பல்வேறு புலவர்கள் தெலுங்கு இலக்கியம் செறிவடைந்தது. பிறகு ஸ்ரீநாதர்(1365-1441) என்பவர் பிரபந்த இலக்கியத்தை பிரபலமாக்கினார். வேறு சிலர் வடமொழி நூல்களை தெலுங்கு மொழியில் மொழிப்பெயர்த்தனர். ஸ்ரீநாதருக்கு பிறகு போதனா(1450-1510), ஜக்கன்னா, கௌரனா போன்றோர் சமயம் தொடர்பான இலக்கியங்களை எழுதினர்.

எனினும், பதினாறாம் நூற்றாண்டை சேர்ந்த விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயரின் காலம் தான் தெலுங்கு இலக்கியத்தின் பொற்காலம் என அழைக்கப்படுகிறது. விஜயநகர காலத்தில் தஞ்சாவூர் மற்றும் மதுரையில் பல்வேறு தெலுங்கு இலக்கியங்கள் தோன்றின. பிறகு சுல்தான்களின் ஏற்பட்டதால் தெலுங்கு இலக்கியத்தில் சற்று தோய்வு ஏற்ப்பட்டது. இக்காலக்கட்டத்தில் தான் தியாகராயர் தன்னுடைய கீர்த்தனைகளை தெலுங்கு மொழியில் எழுதினார்.

20ஆம் நூற்றாண்டுகளில் மேலை நாடுகளில் இலக்கியங்களின் தாக்கத்தால் சிறுகதை, நாவல் போன்ற நவீன கால இலக்கியங்கள் தோன்றின.
1508
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments