குறுக்ஸ் மொழி
by Geethalakshmi[ Edit ] 2010-02-28 23:57:08
குறுக்ஸ் மொழி
குறுக்ஸ் மொழி அல்லது குருக்கு மொழி என வழங்கப்படும் இம் மொழி, ஒரு வட திராவிட மொழியாகும். பிராகுயி, மால்ட்டோ போன்ற பிற வட திராவிட மொழிகளுக்கு நெருக்கமான இம்மொழி, ஓராவோன் மற்றும் கிசான் இனக்குழுவினரால் பேசப்படுகிறது. இம் மொழியைப் பேசுவோர், பீஹார், ஜார்க்கண்ட், ஒரிஸ்ஸா, சட்டிஸ்கர், மேற்கு வங்காளம் முதலிய இந்திய மாநிலங்களிலும், வங்காளதேசத்தின் சில பகுதிகளிலும் பரந்துள்ளனர். வங்காளதேசத்தில் புழங்கும், ஒரே உள்நாட்டுத் திராவிட மொழி இதுவேயாகும். இதனைப் பேசுவோரில் ஓராவோன் இனக்குழுவினர் 1,834,000 பேரும், கிசான் இனக்குழுவினர் 219,000 பேரும் ஆவர். இது, பல வட இந்திய மொழிகளை எழுதப் பயன்படும் தேவநாகரி எழுத்தில் எழுதப்படுகின்றது.
இதனைப் பேசுவோர் தொகை இரண்டு மில்லியனுக்கு மேல் இருப்பினும், இது அழியும் ஆபத்துள்ள ஒரு மொழியாகக் கணிக்கப்படுகிறது.