மதுரைக் காஞ்சி
by Geethalakshmi[ Edit ] 2010-03-01 00:02:56
மதுரைக் காஞ்சி
சங்கத் தமிழ் பாடல் தொகுப்பான பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் அடங்குவது மதுரைக் காஞ்சி. இத் தொகுப்பில் உள்ள நூல்களுள் மிகவும் நீளமானது இதுவே. மங்குடி மருதனார் என்னும் புலவர் இந் நூலை இயற்றியுள்ளார். இப்பாடலில் 782 அடிகள் உள்ளன. பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனைப் புகழ்ந்து இது பாடப்பட்டுள்ளது.
பாண்டி நாட்டின் தலைநகரமான மதுரையின் அழகையும், வளப்பத்தையும் கூறுகின்ற இந்நூல், அந்நாட்டின் ஐவகை நிலங்களைப் பற்றியும் கூறுகின்றது.