மோனையும் அதன் வகைகளும்
by Geethalakshmi[ Edit ] 2010-03-01 00:05:02
மோனையும் அதன் வகைகளும்
எழுவாய் எழுத்தொன்றின் மோனை என யாப்பருங்கலக் காரிகையும்,
அடிதொறும் தலையெழுத்து ஒப்பது மோனை எனத் தொல்காப்பியச் செய்யுளியலும் கூறுகின்றன.
இதிலிருந்து மோனை என்பது செய்யுள் அடிகளின் முதல் எழுத்துக்கள் ஒத்து அல்லது ஒன்றி வருதல் மோனை என்றாகிறது. அடிகளின் முதல் எழுத்துக்கள் மட்டுமன்றி சீர்களின் முதலெழுத்துக்கள் ஒன்றி வரினும் அது மோனையே. சீர்கள் தொடர்பில் வரும் மோனை சீர்மோனை எனவும், அடிகள் தொடர்பில் வருவது அடிமோனை எனவும் குறிப்பிடப்படுகின்றன. மோனைத் தொடை தொடர்பில் அடிமோனையை விடச் சீர்மோனையே சிறப்புப் பெறுகின்றது.
எழுத்துக்கள் ஒத்து வருதல் எனும்போது ஒரே எழுத்துக்கள் வருதல் என்பது பொருளாகாது. ஒத்த எழுத்துக்கள் பின்வருமாறு அமையலாம்.
1. ஒரே எழுத்து ஒன்றுக்கு ஒன்று மோனையாதல்.
2. ஒரே இன எழுத்துக்கள் ஒன்றுக்கொன்று மோனையாதல்
உயிரெழுத்துக்கள் மூன்று இனங்களும், மெய்யெழுத்துக்களில் மூன்று இனங்களும் உள்ளன.
உயிரெழுத்து இனங்கள்
1. அ, ஆ, இ, ஔ
2. இ, ஈ, எ, ஏ, யா
3. உ, ஊ, ஒ, ஓ
மெய்யெழுத்து இனங்கள்
1. ஞ், ந்
2. ம், வ்
3. த், ச்