சார்பு

by Geethalakshmi 2010-03-01 00:10:45

சார்பு


சார்பு (function) உள்ளீடுகளுக்கும் வெளியீட்டுக்கும் இருக்கும் தொடர்பை விபரித்து அமுலாக்கும் ஒரு கூறு ஆகும். உள்ளீடுகள் ஒன்றுக்கு மேற்பட்ட கணியங்கள் அல்லது மாறிகளை கொண்டிருக்கலாம், ஆனால் வெளியீடு ஒன்றாகத்தான் இருக்க முடியும். சார்பை செயற்கூறு என்றும் தமிழில் குறிப்பர்.

பொதுவாக சார்பு f என்ற குறிகொண்டு குறிக்கப்படும். சார்பைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான function என்பதின் முதல் எழுத்தே இக்குறி.

இரு மாறிகளுக்கிடையான தொடர்பை அமுலாக்கும் பின்வரும் செயலியை நோக்குக

y=f(x)

இங்கே y சார் மாறியாகும், x சாரா மாறியாகும். y எந்தப் பெறுமதியை எடுக்கும் என்பது சார்பின் (f இன்) தன்மையில் உள்ளது.

சார்புகள் மாறிகளுக்கு இடையான பல்வேறு தொடர்புகளை அமுலாக்கலாம். கீழே சில எடுத்துக்காட்டுக்கள்:

* நேரியல் சார்பு - linear function
* வளைகோட்டுச் சார்பு - parabolic function
* மடக்கைச் சார்பு - logarithmic funciton
1247
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments