ஆட்களம் (கணிதம்)
by Geethalakshmi[ Edit ] 2010-03-01 00:11:56
ஆட்களம் (கணிதம்)
கணிதத்தில் ஒரு செயலி (சார்பு என்றும் சொல்வர்) அதன் தன்மை காரணமாக ஒரு வரையறை செய்யப்பட்ட சாரா மாறிகளையே கொண்டிருக்கும். எ. காட்டாக f(x) = 1 / x என்ற செயலியை கருதுக. அச்செயலி பூச்சியம் தவிர்ந்த ஏனைய மெய்யெண்களில் எல்லாம் வரையறை செய்யப்பட்டுள்ளது. எந்த ஒரு செயலிக்கும் அதன் சாரா மாறிகள் எடுக்கக்கூடிய பெறுமானங்களின் வரையறை அச்செயலியின் ஆட்களம் (domain) ஆகும்.