சொல் மூலங்களின் வகைகள்

by Geethalakshmi 2010-03-01 00:30:22

சொல் மூலங்களின் வகைகள்


சொற்பிறப்பியல் கோட்பாட்டின்படி சில வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையான பொறிமுறைகள் மூலமே சொற்கள் உருவாகின்றன. இவற்றுள் முக்கியமானவை பின்வருமாறு:

* கடன்பெறுதல்: பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துதல்.
* சொல் உருவாக்கம்: இன்னொன்றிலிருந்து வருவிக்கப்பட்ட சொற்கள், வேறு சொற்களின் சேர்க்கையினால் உருவானவை.
* ஒலிக்குறிப்புச் சொற்கள் மற்றும் ஒலிக் குறியீடுகள்.

புதிதாக உருவாகும் சொற்களின் மூலங்கள் பெரும்பாலும் தெரியக் கூடியவையாக இருக்கின்றன. ஆனால், காலத்தால் பின்னோக்கிச் சொல்லும்போது அக்காலங்களில் உருவான சொற்களின் மூலங்கள் தெளிவில்லாமல் இருக்கின்றன. இதற்கான காரணங்கள்,

* ஒலி மாற்றம்
* சொற்பொருள் மாற்றம்

என்பனவாகும். பெரும்பாலும் ஒன்றுக்கு மேற்பட்ட காரணிகள் கூட்டாக அமைவது வழக்கம். ஒலிமாற்றமும், சொற்பொருள் மாற்றமும் கூட்டாக நிகழ்வது தற்காலச் சொல் வடிவங்களை மேலோட்டமாகப் பார்த்து மூலங்களை அறிய முடியாத நிலையை ஏற்படுத்துகின்றன.


1493
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments