கோட்பாட்டு மொழியியல்
by Geethalakshmi[ Edit ] 2010-03-01 00:32:06
கோட்பாட்டு மொழியியல்
கோட்பாட்டு மொழியியல் (Theoretical linguistics) என்பது, மொழியியல் அறிவு தொடர்பான மாதிரிகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் மொழியியலின் ஒரு துணைத் துறை ஆகும். எலா மொழிகளுக்கும் பொதுவான இயல்புகளைக் கண்டறிந்து விளக்குவதும் இந்த ஆய்வின் ஒரு பகுதியாகும். சொற்றொடரியல், ஒலியியல் (phonology), உருபனியல், சொற்பொருளியல் என்பன கோட்பாட்டு மொழியியலின் அடிப்படைக் கூறுகளாக விளங்குகின்றன. ஒலிப்பியல் (phonetics) ஒலியியலுக்கான தகவல்களைக் கொண்டிருப்பினும், ஒலிப்பியல், கோட்பாட்டு மொழியியலின் எல்லைக்குள் அடங்குவதில்லை. இதுபோலவே உளமொழியியல், சமூக மொழியியல் போன்றனவும் கோட்பாட்டு மொழியியலினுள் அடங்கா.