உருபனெழுத்து முறைமை
உருபனெழுத்து என்பது ஒரு முழுச் சொல்லை அல்லது ஒரு உருபனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு எழுத்தாகும். பல சீனமொழி எழுத்துக்கள் உருபனெழுத்து என வகைப்படுத்தப் பட்டுள்ளன.
ஒவ்வொரு குறியீடும், ஒவ்வொரு சொல்லை அல்லது உருபனைப் பிரதிநிதித்துவம் செய்வதனால், ஒரு மொழியின் சகல சொற்களையும் எழுதப் பெருமளவு உருபனெழுத்துக்கள் தேவைப்படும். ஏராளமான குறியீடுகளும் அவற்றுக்கான பொருள்களை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டியதும், ஒலியனெழுத்து முறைமையோடு ஒப்பிடும்போது, இம்முறைமைக்குள்ள முக்கியமான வசதிக்குறைவாகும். எனினும் சொல்லின் பொருள் குறியீட்டிலேயே பொதிந்திருப்பதால், கோட்பாட்டளவில் ஒரே குறியீட்டையே வெவ்வேறு மொழிகளுக்குப் பயன்படுத்த முடியும். செயற்பாட்டளவில், syntactical constraints ஒரே குறியீட்டு முறைமையைக் எல்லா மொழிகளுக்கும் பயன்படக்கூடிய தன்மையைக் குறைப்பதால், இது, சீன மொழியின் வட்டார வழக்குகள் (dialects) போல மிக நெருக்கமான மொழிகளிடையே மட்டுமே சாத்தியமாகும். கொரிய மொழியும் ஜப்பானிய மொழியும் சீன உருபனெழுத்துக்களைத் தங்கள் எழுத்து முறைமைகளில் பயன்படுத்துவதுடன், பல குறியீடுகளும் ஒரே பொருளிலேயே பயன்படுகின்றன. எனினும் அவையிரண்டும், சீன மொழியில் எழுதப்பட்டவைகளை ஜப்பானியர்களோ, கொரியர்களோ இலகுவில் வாசித்து விளங்க முடியாத அளவுக்கு, சீன மொழியிலிருந்து வேறுபட்டவையாகும்.
பெரும்பாலான மொழிகள் முழுமையாக logographic எழுத்து முறைமைகளைப் பயன்படுத்தாவிட்டாலும், பல மொழிகள் சில logogram களைப் பயன்படுத்துகின்றன. நவீன உருபனெழுத்துக்களுக்குச் சிறந்த உதாரணம் அராபிய எண்கள்ஆகும். இக் குறியீடுகளைப் பயன்படுத்தும் எல்லோருக்கும், அவர்கள் அதை வண், யூனோ, ஒன்று, ஏக் என்று எப்படி அழைத்தாலும், 1 எதைக் குறிக்கிறது என்று விளங்கும். பல மொழிகளிலும் பயன்படும் ஏனய உருபனெழுத்துக்கள் &, @ என்பவற்றையும் உள்ளடக்கும்.
உருபனெழுத்துக்கள் சில சமயங்களில் கருத்தெழுத்துக்கள் (Ideogram) என அழைக்கப்படுவதுண்டு. பண்பியல் (abstract) எண்ணங்களை வரைபுருவினாற் குறிப்பதால் இந்தப் பெயர். மொழியியலாளர்கள் இதன் உபயோகத்தைத் தவிர்க்கிறார்கள்.
மிக முக்கியமான (அத்துடன், ஓரளவுக்கு, வாழுகின்ற ஒரே) நவீன உருபனெழுத்து முறைமை சீனம் ஆகும். இதன் எழுத்துக்கள் வேறுபாடான அளவு மாற்றங்களுடன், சீன மொழி, ஜப்பானிய மொழி, கொரிய மொழி, வியட்நாமிய மொழி மற்றும் பல ஆசிய மொழிகளில் பயன்படுகின்றன. பழங்கால எகிப்திய hieroglyphics மற்றும் மாயன் எழுத்து முறைமையும் உருபனெழுத்து வகையைச் சார்ந்தவையே. இவை இப்போது வழக்கிலிருந்து மறைந்து விட்டன.
முழு உருபனெழுத்து முறைமையினதும் பட்டியலுக்கு எழுத்து முறைமைகளின் பட்டியல் பார்க்கவும்.