ஒப்பீட்டு மொழியியல்
by Geethalakshmi[ Edit ] 2010-03-01 00:38:04
ஒப்பீட்டு மொழியியல்
ஒப்பீட்டு மொழியியல் என்பது, வரலாற்று மொழியியலின் ஒரு கிளைத் துறையாகும். இது, மொழிகளின் வரலாற்றுத் தொடர்புகளை அறிந்துகொள்வதற்காக அவற்றை ஒப்பிட்டு ஆராய்வதை நோக்கமாகக் கொண்டது. மொழிகள் பெருமளவில் கடன்வாங்குவதன் மூலம் அல்லது மரபுவழி மூலம் தொடர்புகளைக் கொண்டிருக்கலாம்.
மரபுவழித் தொடர்பு அம்மொழிகளுக்கு ஒரு பொது மூலம் அல்லது ஒரு முதல்-மொழி இருப்பதை எடுத்துக்காட்டுகிறது. ஒப்பீட்டு மொழியியல் மொழிக் குடும்பங்களை உருவாக்குவதையும், முதல்-மொழிகளை மீட்டுருவாக்கம் செய்து ஆவணப்படுத்தப்பட்ட மொழிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அறிந்து கொள்வதையும் நோக்கமாகக் கொண்டது. சான்றுள்ள மற்றும் மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட சொற்களிடையேயான வேறுபாட்டைக் காட்டுவதற்காக, தப்பியிருக்கக் கூடிய சான்றுகளில் காணப்படாத சொற்களுக்கு முன்னொட்டாக நட்சத்திரக் குறி இடப்படுகின்றது.