முதுமொழிக்காஞ்சி
by Geethalakshmi[ Edit ] 2010-03-01 00:52:36
முதுமொழிக்காஞ்சி
மதுரைப் பதியைச் சேர்ந்த கூடலூர்க் கிழார் என்பவர் இயற்றியது முதுமொழிக்காஞ்சி. சங்கம் மருவியகால 18 நூல்களின் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படும் தமிழ் நூல் தொகுதியில் மிகச் சிறியது இது. ஒவ்வொன்றும் பத்து அடிகளைக் கொண்ட பத்துப் பாடல்களை மட்டுமே கொண்டுள்ளது. இந் நூலிலுள்ள எல்லாப் பாடல்களுமே,
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்
என்றே தொடங்குகிறது. பத்து அடிகளைக் கொண்ட ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனிப் பெயர் வழங்கப்பட்டுள்ளது. இப் பத்துப் பெயர்களும் வருமாறு:
1. சிறந்த பத்து
2. அறிவுப் பத்து
3. பழியாப் பத்து
4. துவ்வாப் பத்து
5. அல்ல பத்து
6. இல்லைப் பத்து
7. பொய்ப் பத்து
8. எளிய பத்து
9. நல்கூர்ந்த பத்து
10. தண்டாப் பத்து