ஐந்திணை ஐம்பது
by Geethalakshmi[ Edit ] 2010-03-01 00:53:58
ஐந்திணை ஐம்பது
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அகப்பொருள் கூறும் நூல்களுள் ஒன்று ஐந்திணை ஐம்பது. இதை எழுதியவர் மாறன் பொறையனார் என்னும் புலவர். இது கி.பி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த நூல் எனக் கருதப்படுகின்றது.
முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என நிலங்களை ஐந்து திணைகளாகப் பிரிப்பது பண்டைத் தமிழர் வழக்கு. அக்காலத் தமிழ் இலக்கியங்களிலும், அவ்விலக்கியங்களில் எடுத்தாளப்படும் விடயங்களுக்குப் பின்னணியாக இத்திணைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. சொல்ல விழைந்த கருப்பொருளின் தன்மைகளுக்கேற்ப உருவாக்க வேண்டிய மனநிலைகளுக்குப் பொருத்தமான பின்னணிச் சூழ்நிலைகளை இத் திணைகளில் ஒன்றோ பலவோ வழங்கின.
ஐந்திணை ஐம்பதில், மேற்காட்டிய ஒவ்வொரு திணையின் பிண்னணியிலும் பத்துப் பத்துப் பாடல்களாக ஐம்பது பாடல்கள் உள்ளன.