ஐந்திணை எழுபது
by Geethalakshmi[ Edit ] 2010-03-01 00:55:21
ஐந்திணை எழுபது
ஐந்திணை எழுபது சங்கம் மருவிய காலத் தமிழ் நூல்களுள் ஒன்று. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படும் 18 நூல்கள் கொண்ட தொகுதியுள் அடங்குவது. அகப்பொருள் சார்ந்த இந்நூலை எழுதியவர் மூவாதியார் என்னும் புலவர். கி.பி ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது.
ஐந்திணைகள் என்பன முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்னும் ஐந்து வகையான பண்டைத் தமிழர் நிலப்பகுப்புகளாகும். இவ்வைந்து திணைகளையும் பின்னணியாகக் கொண்ட மொத்தம் எழுபது பாடல்களைக் கொண்டதால் இந்நூல் ஐந்திணை எழுபது எனப் பெயர் பெற்றது.
அகப்பொருள் சார்ந்த ஏனைய பல தமிழ் இலக்கிய நூல்களைப் போலவே, இதுவும் காதல் வயப்பட்ட உள்ளங்களின் அக உணர்வுகளை அக்கால சமூக வாழ்க்கை முறைகளினதும், பண்பாட்டினதும் பின்னணியிலும், அத்தகைய வேறுபட்ட உணர்வுகளுக்குப் பொருத்தமான நிலத்திணைகளின் பின்னணியிலும் எடுத்துக்கூறுகின்றது.