கைந்நிலை
by Geethalakshmi[ Edit ] 2010-03-01 00:56:45
கைந்நிலை
கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எனப்படும் சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுதியில் அடங்கிய ஒரு நூல். இத் தொகுப்பில் காணப்படும் ஆறு அகப்பொருள் நூல்களுள் இதுவும் ஒன்று. இது அறுபது பாடல்களால் ஆனது. ஐந்து தமிழர் நிலத்திணைப் பிரிவுகளைப் பின்னணியாகக் கொண்டு பாடல்கள் அமைந்துள்ளன. இதன் காரணமாக இதற்கு ஐந்திணை அறுபது என்ற பெயரும் உண்டு. இதை இயற்றியவர் புல்லங்காடனார் என்னும் ஒரு புலவர்.